பாகிஸ்தானிடம் வேகாத இலங்கை பருப்புகள்
எப்படி வென்றார்கள் அல்லது எப்படி தோற்றார்கள் என்பதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் எனவே அதை பற்றி விவரிப்பதில் அர்த்தம் இல்லை.இந்த தொடர் முழுவதும் இலங்கை அணி சார்பாக டில்சானும் மூன்று (சில வேளைகளில் நான்கு) Mகளும் மட்டுமே விளையாடினார்கள்மற்றவர்கள் எல்லைக் கோட்டில் பந்து பொறுக்கி கொடுக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து பந்து பொறுக்கி கொடுத்தார்கள் அவ்வளவே.அதிலும் முபாரக் துடுபெடுத்தாடும் நேரத்தில் அரை முட்டை கூட அவிக்க முடியாது.மனிதருக்கு சர்க்கரை வியாதி இருக்குமோ தெரியாது.இந்த தொடர் முழுவதும் பல அணிகளிலும் இத்தகைய கொளரவ வீரர்கள் விளையாடினார்கள் என்ன செய்வது பதினோரு பேர் விளையாட வேண்டும் என்ற தலை எழுத்து..பதினொருபேர் தான் விளையாட வேண்டும் என்ற தலை விதியை ICC கட்டாயம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துடுப்பாட்ட கட்டுபாட்டு சபைகளுக்குஇது பேருதவியாக இருக்கும். ஆகக் குறைந்தது விமானக் கட்டணம் மற்றும் தங்குமிட செலவுகளையாவது குறைக்கலாம்பாவம் டில்ஷான் அற்புதமாக தொடர் முழுவதும் ஆடி வந்த மனிதரை சக்கர வியுகம் அமைத்து விழுத்தி விட்டார்கள்என்றாலும் அவரின் scoop shotகளுக்காக இந்த தொடர் என்றென்றும் நினைவு கூரப்படும்சங்கா பாவம், எல்லோரும் நல்ல பிள்ளைகளாய் களம் அகல மனிதர் பொறுப்புடன் ஆடினார் மகேல நெற்றில் பயிற்சி செய்ததை மறக்க வில்லை போல அப்படியே அற்புதமாக களத்தில் ஆடிக் காட்டினர்.உமர் குல்லுக்கு ஞாபகம் மறதி இருப்பது இன்றைய போட்டியின் போது தான் உணரக் கூடியதாக இருந்ததுமனிதர் திடீரெண்டு யோக்கர் போடுவது எப்படி என்பதை மறந்து விட்டார் இனி வரும் முக்கிய போட்டிகளின் போது மருந்து குளிசைகளை கையில் எடுத்து செல்வது நல்லது.கம்ரன் அக்மல் வழமை போல் அதிரடியாக ஆடி ஒரு சிறப்பான தொடக்கத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்தார்.அப்ரிடிக்கு இன்றைக்கு ஆத்தா வரம் குடுத்திருப்பா போல. மற்றும் படி மனிதர் கையை சும்மா வைத்திராமல் சுழற்றி வானத்தில் பட்டம் காட்டி விட்டு வெளியேறி விடுவார். இன்றைக்கு ஏனோ அற்புதமாக ஆடினார்.பல நாட்களுக்கு முதலே காசியில் துடுப்பாட்டத்தை தலை முழுகி விட்டு முக்கிய சுழல பந்து வீச்சாளராய் அவதாரமெடுத்த அப்ரிடி ஆத்தாவின் வரம் இல்லாமல் ஜம்பது ஓட்டங்கள் எடுத்திருக்க முடியாது.வழமையாக கஞ்சப் பிசினரியாக இருக்கும் மென்டிஸ்க்கு இன்றைக்கு ஏனோ தாராள மனப்பான்மை வந்து விட்டது.மனிதர் கர்ண பரம்பரைக்கு தாவி விட்டார்.கடைசியாய் இந்தியாவும் இலங்கையும் கிண்ணம் வெல்லாதது மட்டும் தான் எங்களுக்கு ஆறுதல். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு கிடைத்த தோல்விகாக சந்தோசப் படுகிறோம். என்ன செய்வது எங்களுக்கு இனி வெற்றி இல்லை என்றாகி விட்ட போது அவர்களின் தோல்விகளுக்கு மட்டுமே இனி சந்தோசப் பட முடியும்அதிலும் இந்தியா வெல்லாதது எனக்கு பெரும் மகிழ்ச்சி வென்றிருந்தால் அவர்களின் அலபறையை கேட்டே காது மென் சவ்வு கிழிந்திருக்கும்.மற்றும் படி இந்த தொடர் தொடங்கும் போது நான் waste இண்டீஸ் (எழுத்து பிழை இல்லை துடுபாட்டத்தை பொறுத்த வரை இந்த பெயர் தான் அவர்களுக்கு பொருத்தம்)அல்லது இங்கிலாந்து கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று விரும்பியிருந்தேன்.அப்போது தான் அந்த நாடுகளில் சூம்பி கிடக்கும் துடுப்பாட்ட ஆர்வம் துளிர்விடும் என்பது எனது நப்பாசை.ஆனால் அவர்களோ தேநீர் கோப்பையை தவிர வேறந்த கோப்பைகளையும் கையால் தொட மாட்டோம்.என்று தலையில் கை வைத்து சத்தியம் செய்து விட்டு விளையாடுகிறார்கள்இருபது இருபது போட்டிகளில் சுழல் பந்து வீச்சாளர்களின் முக்கியத்தை இந்த தொடர் உணர்த்தியிருக்கிறது.அதே போல் அயர்லாந்தின் எழுச்சியையும் குறிப்பிடலாம் இத்தகையை குறுகிய ஓவர்களை கொண்ட போட்டிகளில்கைப் பிள்ளைகளாலும் நல்ல விறுவிறுப்பான ஆட்டத்தை கொடுக்கலாம் என்பதை அவர்கள் நிருபித்தார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

1 comments:

பூச்சரம் said...

பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..
http://poosaram.blogspot.com/

Post a Comment