நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

எங்கள் தாயகத்தின் தற்போதைய யதார்த்த நிலை உணர்ந்து எடுக்க பட்ட மிகச் சிறந்த முடிவாக நான் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டத்தை கருதுகிறேன்.
எங்கள் அரசியல் சுதந்திரங்களை முன்னெடுக்க ஒரு கூட்டு அரசியல் சார்ந்த பொது கட்டமைப்பு இலங்கைக்கு வெளியே உருவாக்க படுவதன் தேவை இப்போது தான் உணரபட்டிருக்கிறது.
சிங்களவர்களிடம் இருந்து, தனித்து ஆயுதப் போரட்டம் செய்தோ அல்லது ஜனநாயக வழியாக போராடியோ எங்கள் சுதந்திரத்தை வென்றடுக்க முடியாது என்ற யதார்த்தத்தை நாங்கள் எல்லோரும் இப்போது புரிந்து கொண்டிருக்கிறோம்

இந்த திட்டம் சார்ந்த என்னுடைய தனிபட்ட கருத்துகளை எடுத்துரைக்க விரும்புகிறேன்.
இந்த கட்டமைப்பினது பிரதான நோக்கம் தமிழர்களினது நியாய பூர்மான வமான அரசியல் கோரிக்கையை வெளி உலகின் உதவியின் ஊடக வென்றேடுப்பதாகும்

அந்த நோக்கத்தின் அடிப்படையில் அதன் கட்டமைப்புகளும் அதன் செயற்பாடுகளும் முன்னெடுக்க பட வேண்டும் இந்த அமைப்பு வன்முறை சாரா ஜனநாயக அடிப்படையில் அமைந்த அமைப்பு என்ற தோற்றப்பாடுகள் வெளி உலகில் தோற்றுவிக்க படுவது முக்கியமானதாகும்

இதற்காக சில விட்டு கொடுப்புகள் செய்ய படுவது அவசியம்.இதில் பிரதானமானது புலிகள் அமைப்பு சார்ந்த அடையாளங்கள் முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்.இதன் கொடியாக புலி கொடி பயன் படுத்த படக்கூடாது மேலும் பிரபாகரனின் படங்களோ அல்லது புலிகள் அமைப்பு சார்ந்த படங்களோ இதன் நிகழ்வுகளிலோ அல்லது ஆவணங்களிலோ இடம் பெறக் கூடாது.

புலி கொடி தமிழனின் கொடி என்று நாங்கள் வாதாடலாம் அல்லது நீதி மன்ற உத்தரவு பெறலாம் ஆனால் பிரச்சனை அதுவல்ல வெளி உலகில் இன்னமும் புலி கொடி புலிகளின் கொடி தான் அவற்றின் அடையாளங்கள் சார்ந்த அமைப்புக்களின் போராட்டங்கள் அதன் அனுதாபிகளால் நடத்த படுவதாகவே அர்த்தப் படுத்த படும்.
இது எங்களின் அரசியல் விடுதலையை நோக்கிய பயணத்தை உலகின் பயங்கர வாதம் என்கிற குருட்டு வாதத்திடம் மீண்டும் பறி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளும்.
நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு என்ற பூச்சாண்டியை வெளியே காட்டி கொண்டு உள்ளே இலங்கை அரசு செய்யும்நடவடிக்கைகளுக்கான எங்கள் பதில் நடவடிக்கைகள் உணர்ச்சி வசப் பட்டு எடுப்பவைகளாக இல்லாமல் அறிவு பூர்வமானதாக இருக்க வேண்டும். வெளி உலகிற்கு எதை வெளிப்படுத்துகிறோம் என்பதில் நாங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் இனி வரும் எங்கள் போராட்டங்கள் நண்பர்கள் அற்ற போராட்டமாக இருக்க கூடாது.
அது போல் பிரபாகரனின் படங்களோ அல்லது புலிகள் அமைப்பு சார் படங்களோ இதில் பயன் படுத்த படக் கூடாது இதன் அர்த்தம் அவர்களின் தியாகங்களை புறக்கணிப்போதோ அல்லது அவர்களை கொச்சை படுத்துவதோ என்பதல்ல மாறாக இதன் வருங் கால நடவடிக்கைகளுக்கு அவை தடையாக அமையக் கூடாது என்பது தான். புலிகள் மீதான தடையின் பின்னர் பல நாடுகளிலும் TRO அமைப்பு தடை செய்ய பட்டது குறிப்பிட தக்கது மேலும் இதையே அடிப்படையாக வைத்து இந்த அமைப்பை தடை செய்யு மாறு இலங்கை அரசு எதிர் காலத்தில் அழுத்தம் கொடுக்கலாம்.

அவர்கள் (புலிகள்) அடைய நினைத்தை அடைவது தான் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய அஞ்சலியே தவிர அவர்களின் படங்களை வைத்து கொண்டு வெத்து கோசமிடுவதல்ல.

முற்றிலும் புதிதான வன்முறையற்ற ஜனநாயக வழிமுறையில் தங்கள் அரசியல் விடுதலைக்காக போராடும் அமைப்பாக இது உலகெங்கும் அறியப் பட வேண்டும் இதுவே நாங்கள் புதிய நண்பர்களை பெற்று கொள்வதற்கான வழி.

இந்த பொதுமை படுத்த பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளின் நாடுகளில் இடம்பெறும் தேர்தல்களில் பங்கெடுத்து அவற்றின் நிர்வாக கட்டைமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் இது வழி வகுக்கும் இது வரை இங்கே(புலத்தில்) தேர்தல்களில் தனி நபர் சார்ந்த முயற்சிகளே இடம்பெற்றன அவை பெரும்பாலோனோரின் ஆதரவு கிடைக்கததால் வெற்றி பெற வில்லை.
அதை விடுத்து விட்டு யதார்த்தங்களை சொல்பவர்களை துரோகிகள்(kp உள்பட) எனப் பட்டம் கட்டுவது எதற்கும் உதவாது உணர்ச்சி வசப் பட்டு குறுகிய கால ஓட்டத்தில் சிந்திக்காமல் அறிவு பூர்மாக நீண்ட காலப் போக்கில் சிந்தித்து செயல் படுவது நல்லது சில விடயங்களை நாங்கள் விரும்பினாலும் வெளி உலகின் பார்வைக்கு வெளிப் படுத்த கூடாது.

தமிழனின் கூடப் பிறந்த குணமான குழி பறிப்புக்களும் குத்துவேட்டுகளும் இல்லமாலும் உலகின் பயங்கரவாத சந்தேகப் பட்டியலிலில் இடம்பெறாமலும்தப்பினால் இந்த அமைப்பு வரும் காலத்தில் ஈழத் தமிழரின் அரசியல் விடுதலையை நோக்கிய பயணத்தில் தன் முத்திரையை பதிவு செய்யும் என்பது எனது நம்பிக்கை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment