தமிழீழத்தின் எல்லைகள்


நாடு கடந்த தமிழீழ யோசனைகளுக்கு பிறகு பலருக்கும் அதன் எல்லைகளை பற்றிய சந்தேகங்கள் எழுந்திருக்கும்.இப்போது எழுந்திருக்கும் இந்த சந்தேகங்கள் புலிகளின் போராட்டம் வேகமெடுக்க தொடங்கிய கால கட்டங்களில் பல வெளி நாட்டு பத்திரிகையாளர்களுக்கு இருந்தது. எம்மவர்களின் புலப் பெயர்வை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் தமிழர் பிரச்சினை அறிமுகம் ஆக தொடங்கிய கால கட்டம் அது.


அப்போது கிட்டு வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தார்அந்த கால பகுதியில் (1990 ஆம் ஆண்டு) ஒரு நாள் கிட்டு சுவிட்சர்லாந்தில் ஒரு கூட்டத்தில் பேசி கொண்டிருந்த போது இடை மறித்த ஒரு வெள்ளை கார நிருபர் நீங்கள் தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்று சொல்லி பேசுகிறீர்கள் இந்த தமிழ் ஈழம் எங்கே இருக்கிறது? இதன் எல்லைகள் என்ன? என்று கேட்டார்


இதை சற்றும் எதிர் பாராத கிட்டு ஒரு கணம் திகைத்து நின்றார் பின்னர் தன்னை சுதாகரித்து கொண்டு இப்படி பதில் அளித்தார்


'இலங்கை தீவின் வரைபடத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் கையிலே எடுத்தக் கொள்ளுங்கள் இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் குண்டுகள் விழுகின்றனவோ எந்ததெந்த பகுதியில் பீரங்கி வெடித்து அழிவுகள் நடக்கின்றனவோ எந்தெந்த இடங்களில் தமிழ் பெண்கள் சிங்கள இராணுவத்தினரின் வன்முறைக்கு ஆளாகி அவலபடுகின்றனரோ அந்தந்த இடங்களை எல்லாம் வரை படத்தில் வண்ணம் தீட்டுங்கள் முடிவில் வண்ணம் பூசப்பட்ட அந்த பகுதி தான் தமிழ் ஈழம் அது தான் எங்கள் எல்லைகள்'


என்னை பொறுத்தவரை முள்ளிவாய்க்கல்களை முகவரியிட கிட்டு மறந்து விட்டார் புத்த பிரானின் சீடர்களின் அபாரமான பரிணாம வளர்ச்சியை (மனிதனில் இருந்து மிருகத்திற்கு) கிட்டு எதிர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.


எங்கெல்லாம் இரசாயன் குண்டுகள் விதைக்க படுகிறதோ எங்கெல்லாம் பல்குரல் குண்டு மழை பொழிகிறதோ எங்கெல்லாம் மருத்துவ மனைகள் இலக்கு வைத்து தாக்கப் படுகிறதோ எங்கெல்லாம் மனித சதை கூட்டங்கள் குவிந்து கிடக்கிறதோஅங்கெல்லாம் வண்ணம் தீட்டுங்கள் முள்ளிவாய்க்கால்கள் கிடைக்கும்


அது சரி இலங்கைக்கு வெளியே உள்ள ஈழத்தின் எல்லைகளை எப்படி

வரையறுப்பதுஉலக வரை படத்தையும் சிறிது வண்ணக் கலவையையும் ஒரு தூரிகையையும் எடுத்து கொள்ளுங்கள்


எங்கெல்லாம் குத்து வெட்டுகளும் குழிபறிப்புக்களும் நடக்கின்றனவோ எங்கெல்லாம் துரோகி பட்டங்கள் வாரி வழங்கபடுகின்றனவோ எங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்களையும் உண்ண விரதங்களையும் தொடர்ந்து கோழி புரியானிகளும் குவாட்டர்களும் பரிமாறப் படுகின்றனவோ(வீடுகளில் தான்) எங்கெல்லாம் ரத்தம் தராமல் சத்தம் மட்டுமே போட்டு கொண்டு தமிழீழ கனவுகளில் மிதக்கிறார்களோஅங்கெல்லாம் வண்ணம் தீட்டுங்கள் அதன் எல்லைகள் கிடைக்கும்


குறிப்பு: தப்பி தவறி எங்கெல்லாம் குடும்ப ஆட்சி நடக்கிறதோ எங்கெல்லாம் கோழிபிரியாணிக்கும் குவாட்டருக்கும் வாக்குகள் களவாடப்படுகிறதோ எங்கெல்லாம் திரை நட்சத்திரங்களுக்கெல்லாம் கோயில் கட்டி கும்பாபிசேகமும் பாலபிசேகமும் நடக்கிறதோ அங்கெல்லாம் வண்ணம் தீட்டி விடாதீர்கள் அது உலகில் இன உணர்வும் மானமும் உள்ள அரிதான மனிதர்கள் வாழ்கின்ற ஒரு இடத்தை உங்களுக்கு காட்டும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read Comments

0 comments:

Post a Comment